மந்திர மாவதும் மாமருந் தாவதும்
தந்திர மாவதும் தானங்கள் ஆவதும்
சுந்தர மாவதும் தூய்நெறியாவதும்
எந்தை பிரான் தன் இணையடி தானே.
-திருமூலர்
-திருமூலர்
இறைவனை வணங்கும் மந்திர சொல்லாகவும், பிறவிப்பெரும் துயரைப் போக்கும் மாமருந்தாய்த் திகழ்வதும், இறைவனை எளிதில் அடையும் உபாய வழியாகவும், பிற உயிர்களுக்கு உணவளிக்கும் தான தர்மங்களாகவும், அழகான திருவுருவுமாவதும், நல்ல நெறிக்கு மக்களை அழைத்துச்செல்லும் வழித்துணையாகவும் இருப்பது எமக்குத் தந்தையாய்த் திகழ்கின்ற இறைவனின் திருவடிகளே ஆகும்.
No comments:
Post a Comment