யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.
-திருமூலர்
உண்பதற்கு முன் சிவனை அன்புடன் பச்சிலையிட்டு வழிபடுவதும், பசுவுக்கு ஒரு வாயளவு புல் கொடுத்தலும், உண்பதறுகுமுன் ஒரு பிடி அளவேனும் உணவு பிறர்க்குக் கொடுப்பதும் எல்லார்க்கும் இயன்ற தானமாகும். முடியாதெனில் பிறர் மனம் நோகாதவாறு இனிமையாய் பேசுதலும் இயன்ற தானமாகும்.
No comments:
Post a Comment