ஒன்று கண்டேன் இவ்வுலகுக்கு ஒருகனி
நன்று கண்டாய் அது நமசிவாயக் கனி
மென்று கண்டால் அது மெத்தென்று இருக்கும்
தின்று கண்டால் அது தித்திக்கும் தான் அன்றே.
-திருமூலர்
உலக மக்கள் அனைவரும் உண்பதற்கு ஏற்ற பழம் ஒன்றை நான் கண்டுபிடித்தேன். அது என்ன பழமெனில், இதுதான் சிவபெருமானின் திருநாமமாகிய நமசிவாயம் என்னும் இனிய பழம். அப்பழத்தை உண்ண தொடங்கினால் அது நாவுக்கும், பல்லுக்கும் பெரும் இன்பத்தை அளிக்கும். அந்த நமசிவாயம் என்னும் பழத்தைத் தின்னும்போது இதுவரை எப்பழமும் தராத இனிய சுவையை அப்பழம் தந்தது.
No comments:
Post a Comment