Wednesday, 8 August 2012

இறைவனின் விருப்பம்.

உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து  பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.
-திருமூலர்

இறைவன் ஏழு உலகங்களையும், பிரளயங்களையும், நிலம் முதலிய ஐம்பூதங்களையும் விரும்பித் தோற்றுவித்தான். விரும்பி நின்றே உயிரிலும், உடலிலும் பொருந்திச் சீவகோடிகளுக்கு உதவினான்.

No comments:

Post a Comment