Thursday, 9 August 2012

புலால் உண்போர்க்கு வரும் தீங்கு

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்
செல்லகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே
-திருமூலர்

தீய உணவான பிறிதோர் உயிரின் உடலை உண்ணும் கீழ்மக்களை எமன் தன் தூதுவர்களை அனுப்பி அத்தீயவர்கள் எங்கும் தப்பி ஓடாமல் இருப்பதற்காக அவர்களை நரகத்தில் தள்ளி வாட்டி வதைப்பான்.

இவ்வுலகில் வாழும் மாந்தரில் சிலர் பிறிதோர் உயிரைக்கொன்று அதன் உடலை உணவாக உட்கொள்கின்றனர். இது பெரும்பாவச் செயலாகும். சித்தர்கள் அனைவரும் வாயில்லா உயிர்களின்மேல் பேரிரக்கம் கொண்டவர்கள். எவ்வுயிரையும் தம்முயிர் போல் எண்ணி இரங்கியவர்கள். உயிர்க்கொலை செய்யும் பாதகர்களை வன்மையாகக் கண்டித்தவர்கள்.

No comments:

Post a Comment