காணுரு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்ர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.
-திருமூலர்
கண்ணில் தெரிகின்ற வாசனையுள்ள சந்தனத்தையும், வானையே மறைக்குமளவு மலர்களிட்டு இறைவனை பூஜித்தாலும், உடல், ஆன்மா (உயிர்) என்னும் இரண்டினுள் உடலை மறந்து உயிரானது சிவபெருமானைக் காணும் வரை ஒருவருடைய ஆன்மா இறையனுபவத்தை பெற இயலாது.
ஆழ்நிலை தியானம் (சமாதி நிலை) என்பது புற உலகத் தொடர்பில்லாமல் எல்லையற்ற பேரின்பத்திலே திளைத்திருக்கும் ஓர் அற்புத நிலையாகும். அந்நிலையில் இருக்கும் ஒருவருக்குத் தமது உடல் இருப்பதையே மறந்து விடுவர். இந்நிலையே தியானத்தின் இறுதிநிலை. உயிரோட்டம் இருக்கும். உணர்வோட்டம் இருக்காது. இந்த பேரின்ப நிலையைத்தான் திருமூலர் 'ஊனினை நீக்கி உண்ர்பவர்க் கல்லது' என்னும் வரிகளில் குறிப்பிடுகிறார்.
No comments:
Post a Comment