Thursday, 9 August 2012

யாக்கை (உடல்) நிலையாமை

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடகொடியாரொடு மந்தணம் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே
-திருமூலர்

ஒருவர் தமக்கு மிகவும் பிடித்த இனிய உணவினைத் தமது மனைவியிடம் சொல்லி செய்து வைத்து உண்டார். தனது மனைவியோடு அன்றிரவு இனிமையாகப் பேசி காலங்கழித்தார். பின்பு படுத்தவுடன் இடப்பக்கம் வலிக்கிறதே என்று தன் மனைவியிடம் முறையிட்டார். காலையில் கண் விழித்த மனைவி பார்த்ததும் அவர்(கணவர்) இறந்திருந்தார்.

இப்பாடல் மனித வாழ்வின் நிலையற்றத் தன்மையை மிகவும் அழகாக சித்தரிக்கிறது.ஓடி ஆடி பாடுகின்ற மனிதனின் உயிர் ஒரே இரவில் அத்தனை சொத்துக்களையும், சொந்தங்களையும் இப்புவியிலே விட்டு கூட்டை விட்டுப் பிரிந்து செல்லும் பறவை போல ஒரு நாளில் பிரிந்து விடுகிறது.

No comments:

Post a Comment