இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமம் செய்யாதவர் தம்பால தாகும்
உருமிடி நாகம் உரோகணி கழலை
தருமம் செய்வார் பக்கல் தாழாகிலவே
இருமலும், இரத்தம் குறைவால் வரும் இரத்த சோகை என்னும் நோயும், சளியும், கணைச்சூடும் போன்றவை எல்லாம் பிறருக்கு உதவி செய்யாதவர்க்கே உரிய உடைமைகளாகும்.
அச்சம் தரும் இடி, நாகம்-இராகு,கேது ஆகிய பாம்புகளால் வரும் தொல்லைகள், உரோகிணி நட்சத்திரத்தால் சிலருக்கு விளையும் தீமைகள், முன் கழுத்துக் கழலை போன்ற கட்டிகள், எல்லாம், தருமம் செய்பவர்கள் பக்கம் நெருங்காது.
No comments:
Post a Comment