காமம் வெகுளி மயக்க மிவைகடிந்து
ஏமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி
ஓமெனும் ஓசையி னுள்ளே யுறைவதோர்
தாம மதனைத் தலைப்பட்ட வாறன்றே
-திருமூலர்
காமம், வெகுளி, மயக்கம் ஆகியன முக்குற்றங்களாகும். முக்குற்றங்களும் நீங்கி சிவனது திருவடிப் பேற்றின்பம் பெற்ற அடியவனுக்கு பிரணவ ஒலியில் தங்கியிருக்கும் சிவஒளி ஒன்று உண்டாகும். மேற்சொன்ன முக்குற்றமும் நீக்கினால் மாயை,வினை,ஆணவம் நீங்கும்.
No comments:
Post a Comment