Thursday, 9 August 2012

பிறன்மனை விழையாமை

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறும் காளையர்
காய்ச்ச பலாவின் கனிஉண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக்கு இடர் உற்றவாறே.
-திருமூலர்

தாலி கட்டிய மனைவி இல்லத்தில் இனிதாய் இருக்கையில், வேறொருவர் மனைவியை விரும்பும் இளைஞர்கள் நன்கு பழுத்த பலாப்பழத்தை விட்டு முட்கள் அடர்ந்து வளர்ந்திருக்கும் ஈச்சம் பழத்துக்கு விருப்பபடுவதற்கு ஒப்பாகும்.

தன்னை உண்டவருக்கு மிகவும் சுவையைக் கொடுப்பது பலாப்பழம். அச்சுவைக்கு தாலி கட்டிய மனைவியையும், சிறிதளவே சுவை தந்து தன்னை பறிப்பவர்களுக்கு முட்களால் பெருந்துன்பத்தை தருவது ஈச்சங்கனி. இதற்கு வேறொருவர் மனைவியையும் திருமூலர் உதாரணம் காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment