பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழி நடவாதே.
-திருமூலர்
நல்வினை,தீவினையாகிய பொருள்களால் நிறைந்து வைக்கப்பட்டிருக்கும் இவ்வுடலானது இறந்துவிட்டால் மனைவியும், பிள்ளைகளும் கூடவே உயிர்விடத் துணியமாட்டார்கள். ஆனால் நாம் வாழ்நாளில் செய்த புண்ணியங்களும், பாவங்களும், கொண்ட விரதமும், கற்றறிந்த ஞானமும் நம்முடன் பின் தொடர்ந்து வரும்.
No comments:
Post a Comment