ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணுங் காலம் அறிமினே
-திருமூலர்
எல்லார்க்கும் கொடுங்கள். இவர் மேலோர், இவர் கீழோர் என்று பாகுபாடு பார்க்காதீர்கள். விருந்தினரை எதிர்பார்த்து உண்ணுங்கள். மிக விரைந்து உண்ணாதீர்கள். காகங்கள் உண்ணுங்காலத்து பிற காகங்களையும் அழைத்து உண்பதை அறிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment