அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப் பாரே.
- திருமூலர்
அன்பு வேறு; சிவம் வேறு. என்று பிரித்துப் பார்ப்பவர்கள் அறிவில்லாத மூடராவர். அன்புதான் சிவம் என இவர்களில் ஒருவரும் அறிய மாட்டார். அன்புதான் சிவம் என இவர்கள் அறிந்துகொண்டால், பிறகு இவர்களே அன்புருவாய், சிவமயமாய் ஆனந்த வெள்ளத்தில் மிதப்பார்கள்.
No comments:
Post a Comment