பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தல்மற்று
ஆசற்ற சற்புத்திர மார்க்க மாகுமே.
-திருமூலர்
திருமூலர் சற்புத்திர மார்க்கத்தில் எட்டு நெறிகளைக் கூறுகிறார்.
பூசை செய்தல், பாராயணம் செய்தல், இறைவனின் புகழை கூறி வணங்குதல், மந்திரம் செபித்தல், இவை குற்றமறச் செய்யும் நற்றவமாகும். உண்மை பேசுவது, காமம், பகை, கோபம் நீக்குவது கைகொள்ள வேண்டிய தூய்மை ஆகும். அன்போடு படைப்புக்கு உழைத்தல், நைவேத்தியம் இவை சற்புத்திர மார்க்கத்துக்கு உரிய உறுப்புகள் ஆகும்.
No comments:
Post a Comment