Wednesday, 8 August 2012

சிவபூசை

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கங்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே
-திருமூலர்

உள்ளிருக்கும் ஆன்மாவே சிவனிருக்கும் கருவறை. ஊனாலாகிய உடம்பே எம்பெருமானுக்கு ஆலயம். வள்ளலை ஐந்தெழுத்தால் வழிபடும் வாய் கோபுரவாசல். மெய்ப் பொருளுண்மை அறிந்தவர்க்கு உயிரே சிவலிங்கம். மெய்-வாய் புலன்கள் ஐந்தும் அழகுமிக்க மணி விளக்காகும்.

No comments:

Post a Comment