Wednesday, 8 August 2012

குரு பூசை

உச்சியுங் காலையும் மாலையும் ஈசனை
நச்சுமின் னச்சி நமவென்று நாமத்தை
விச்சுமின் விச்சி விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயக னாகுமே
-திருமூலர்

ஒரு நாளின் மூன்று வேளைகளிலும் சிவபெருமானை வழிபடுவதற்குப் பேரன்பு கொள்ளுங்கள். 'நமசிவாய' என்னும் திருவைந்தெழுத்தைப் புகழ்ந்தோதிப் போற்றுங்கள். சந்திரன்,சூரியன்,அக்கினி யென்னும் முச்சுடரும் சிவனார் திருவருள் ஒளியென்பதை உணருங்கள். அவ்வொளியில் நந்தியென்ற பெயருடைய தலைவனைக் கண்டு வழிபடுங்கள்.

No comments:

Post a Comment