Monday, 30 July 2012

(ஆன்மிக) வாழ்வின் நோக்கம்

வாழ்க்கைப்பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். இது எனது புரிதல். பலர் முரண்படலாம். சிலர் ஆமோதிக்கலாம்.

ஐவிரல் தத்துவம்:இறைவன் எங்கும் இறைந்து கிடக்கும் அருட்பெரும் ஜோதி ஆவார். நேரம்,இடத்தை கடந்து நிற்கும் கடவுள் (பெருவிரல்) ஆவார். அந்த ஜோதிபிழம்பின் ஒரு துளி ஆன்மாவாகிய நாம் (சுட்டு விரல்) ஆவோம்.

இறைவன் ஆன்மாவை (மனித உடலில்) உலகிற்கு அனுப்பும்போது மனம் (என்னும் திரை மூடி) என்றையும் சேர்த்து அனுப்பிவிடுகிறார். இந்த மனத்திரை வரும்போதும், வளரும்போதும் மேலும் மூன்று திரைகளை சேர்த்து "நாம் எல்லாம் ஆத்மா" என்ற உணர்வை மறைக்கிறது. அது முறையே ஆணவம்(நடுவிரல்), கர்மா(மோதிர விரல்), மாயை(சுண்டு விரல்.)திருமூலர் இவற்றையே மும்மலங்கள் என்று கூறுகிறார்.

இறைவன் இட்ட கடமையை (அ) கட்டளையை நிறைவேற்றுவதும், இம்மும்மலங்களை நீக்கி ஆத்மா (என்ற) இறைவனை தரிசிப்பதும் இப்பிறப்பின் நோக்கமாகும். இதை நோக்கி நாம் உயிர் வாழ்வதே வாழ்க்கை ஆகும். இறைவனுக்கு அது கண்ணாமூச்சி விளையாட்டு ஆகும்.

சுட்டுவிரலையும்,பெருவிரலையும் ஓன்றாய் சேர்த்து, மற்ற விரல்களை ஒதுக்கி வைக்கும் சின்முத்திரை விளக்குவதும் இதுவே...

No comments:

Post a Comment