Wednesday, 1 February 2012

ஞானம்

புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவ ராவதும்
அண்ணல் இறைவன் அருள் பெற்ற போதே.
- திருமூலர்



விளக்கம்:
விளக்கின் சுடரான ஞானம் விளங்குவதும், மண்ணுலகில் ஞானிகளாவதும், விண்ணுலகில் தேவ உருவில் திகழ்வதும் என் அண்ணல் சிவன் வழங்கிய அருளாலமைந்தவை.

No comments:

Post a Comment