Wednesday, 1 February 2012

முப்பொருள் தன்மை

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணுகில் பசு பாசம் நிலாவே.



விளக்கம்:
பதியைப் போலவே பசுவும் பாசமும் தொன்மையானவை. பாசம் என்றும் ஆன்மாவை உலக பந்தத்தில் ஈடுபடுத்தும். பதியை பசு அணுகினால் பாசம் விட்டொழியும்.
பசு - ஆன்மா, பதி - இறைவன் (சிவன்), பாசம் - உலக பந்தம், லௌகிக ஆசை, நிலாவே - நிற்க மாட்டா.

No comments:

Post a Comment